உதயநிதி ஸ்டாலின் தற்போது x பக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது எடப்பாடி பழனிச்சாமி உதயநிதி ஸ்டாலினை விஷ காளான் என்று விமர்சித்திருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக துணை முதல்வர் உதயநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருதாவது, கடந்த காலங்களில் திட்டங்களுக்கு அம்மாவின் பெயரை சூட்டிய நிலையில், கை ரிக்ஷாவை ஒழித்தது முதல் கம்ப்யூட்டர் கல்வியை தந்தது வரை நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய நம் கலைஞர் அவர்களின் பெயரை அரசு திட்டங்களுக்கு சூட்டுவதும் சிலைகள் எழுப்புவதும் நாம் அவருக்கு செலுத்தும் மரியாதையின் வெளிப்பாடு.

நன்றி என்றால் என்னவென்றே தெரியாத எதிர்க்கட்சித் தலைவருக்கு இது புரியாது. யார் காலை பிடித்து முதலமைச்சர் ஆனாரோ அவர் காலையே வாரிவிட்டவர். அவர் நன்றி உணர்ச்சி பற்றி தெரியாத காரணத்தினால் இப்படி எல்லாம் பேசுகிறார். அவர் வேண்டுமானால் அவர் ஊர்ந்து  சென்ற டேபிள் மற்றும் சேருக்கு சிலை வைத்துக் கொள்ளட்டும். நாம் நம்மை ஆளாக்கிய கலைஞருக்கு சிலை வைப்போம் என்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும் இதோ அந்த அறிக்கை,