
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து தூய்மை பணியில் ஈடுபட்டார். இதேபோன்று கடந்த வருடமும் பிரதமர் மோடி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் இது குறித்தான புகைப்படங்களை தன்னுடைய x பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி தன்னுடைய இளம் வயது நண்பர்களுடன் சேர்ந்து தூய்மை பணியை மேற்கொண்டதாக பதிவிட்டுள்ளார்.
அதோடு இளம் நண்பர்களுடன் சேர்ந்து தூய்மை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டதாகவும் இந்த முயற்சி தூய்மை இந்தியா என்ற உணர்வை மேலும் வலுப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
हम शपथ लें कि हम जहां भी रहेंगे, फिर चाहे वो घर हो, हमारा मोहल्ला हो या हमारा Workplace हो हम वहां स्वच्छता रखेंगे: PM @narendramodi pic.twitter.com/DZAUZJcNuW
— PMO India (@PMOIndia) October 2, 2024