தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகும் நடித்து வருகிறார். சமீபத்தில் காஜல் அகர்வால் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஹிந்தி திரையுலகுக்கும் தென்னிந்திய திரையுலகுக்கும் இடையே பாகுபாடு இருக்கிறது. இந்தியில் ஷர்மிளா தாகூர், ஹேமா மாலினி ஆகியோர் திருமணத்திற்கு பிறகும் நடித்தனர். இப்போது தீபிகா படுகோன், ஆலியா பட் ஆகியோரம் நடிக்கின்றனர். ஆனால் தென்னிந்திய திரை உலகில் திருமணமான நடிகைகளுக்கு இந்த வாய்ப்புகள் கிடைப்பது கிடையாது.

அந்த விஷயத்தில் நயன்தாரா மட்டும் விதிவிலக்காக இருக்கிறார். அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. தென்னிந்திய திரை உலகினர் திருமணமான நடிகைகளை ஓரம் கட்டுகின்றனர். அந்த நிலைமையை விரைவில் மாற்றுவோம். இந்த தலைமுறை நடிகைகள் திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகும் நடிக்க வருகின்றனர். ரசிகர்களின் பார்வையும் மாறிவிட்டது. நல்ல கதையம்சம் இருக்கும் படங்களை ரசிகர்கள் ரசிக்கின்றனர். எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என கூறியிருக்கிறார்.