சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் சதாசிவம் (31) என்பவர் வசித்து வருகிறார். இவரின் வீட்டின் அருகே நேற்று இரவு வினோத், கார்த்திகேயன் மற்றும் கண்ணன் ஆகியோர் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். அதாவது இவர்கள் தன்னுடைய நண்பனின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் அங்கு சென்று நலம் விசாரித்த பிறகு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தனர். இவர்களிடம் சதாசிவம் என் வீட்டின் அருகில் நின்று சத்தமாக பேச வேண்டாம். இங்கிருந்து கிளம்பி செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் அவர்கள் சதாசிவத்தை கத்தியை காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இது தொடர்பாக சதாசிவம் தன் வீட்டின் அருகே உள்ள உறவினர்களிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சதாசிவம், அன்பழகன், பீட்டர், பாலகிருஷ்ணன், வேலு, செல்வம் ஆகிய 6 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்களை மடக்கிப்பிடித்தனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் தகறாறு முற்றியது.

இவர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டதில் கணேசன் (24) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த மோதலில் இரு தரப்பினருக்கும் இடையே காயம் ஏற்பட்ட நிலையில் திருமுல்லைவாயில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கணேசனின் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த குற்ற செயலில் ஈடுபட்ட 6 பேரையும் 6 மணி நேரத்தில் காவல்துறையினர் கைது செய்த நிலையில் வினோத் மட்டும் தப்பி ஓடிவிட்டார். அவரை வலை வீசி காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.