
ஸ்ரீபெரும்புதூரில் தனியார் சித்த மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷீலா ராணி(19) என்பவர் முதலாம் ஆண்டு படிப்பு வந்துள்ளார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நேரம் ஷீலா ராணி திடீரென வாந்தி எடுத்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஷீலா ராணி ஏற்கனவே இருந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் ஷீலா ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஷீலா ராணி ஆன்லைனில் பொட்டாசியம் சயனைடு விஷத்தை வாங்கி தண்ணீரில் கலந்து குடித்தது உறுதியானது.
அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து சக மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.