
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவமனையின் வெளியே சாலையோரம் பல நோயாளிகள் படுத்திருந்த காட்சி ஆட்சியரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.”அவ்ளோ பெரிய ஹால் இருக்கு, இங்க ஏன்மா படுத்துருக்கீங்க?” என்று நோயாளிகளின் உறவினர்களிடம் கேள்வி மாவட்ட ஆட்சியர் கேள்வி எழுப்ப , மருத்துவமனையின் நிர்வாகம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்தார்.
நோயாளிகளுக்கு போதுமான படுக்கைகள் இல்லாததால் தான் அவர்கள் வெளியே படுத்திருக்கிறார்கள் என்ற உண்மை தெரியவந்ததும் மாவட்ட ஆட்சியர் கடும் கோபம் அடைந்து அடிப்படை வசதிகள் ஏன் இல்லை என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.