
திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக மாற்றி அறிவித்தது. அதன் பிறகு நேற்று எல்லைப் போர் தியாகிகள் தினத்தை நினைவு கூர்ந்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அதாவது நவம்பர் 1-ம் இது எல்லைகள் பிரிக்கப்பட்ட தமிழ்நாடு தனியாக பிரிந்த நிலையில் ஜூலை 18ஆம் தேதி தான் அண்ணாதுரை சட்டப்பேரவையில் தமிழ்நாடு என பெயர் மாற்றிய தீர்மானம் நிறைவேற்றினார்.
இதன் காரணமாக தமிழ்நாடு பெயர் மாற்றிய அந்த தினத்தை தமிழ்நாடு தினமாக திமுக அரசு அறிவித்திருந்த நிலையில் பாஜகவினர் நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமாக கூறினார். நேற்று கூட ஆளுநர் ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஆகியோர் தமிழ்நாடு தினம் எனக்கொரு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில்திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் நவம்பர் 1-ம் தேதியை ஏன் தமிழ்நாடு தினமாக கொண்டாடக்கூடாது என்பதற்கு தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. எனவே வருடம் தோறும் அந்த நாளை நம்முடைய அண்டை மாநில அரசுகளும், அந்த மாநிலத்தின் மக்களும் மாநிலங்கள் உருவான நாளாக கூறி மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள். தமிழ்நாடு பொறுத்த வரையில் இந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் நிலப்பரப்பு அடிப்படையில் தமிழ்நாடு புதிதாக உருவான மாநிலம் கிடையாது. சென்னை மாகாணத்தில் இருந்து மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது பல பகுதிகளை நாம் நம்முடைய அண்டை மாநிலங்களுக்கு இழக்க நேர்ந்தது. எனவே இந்த நாள் என்பது நமக்கு இழப்பு ஏற்பட்ட நாளாகும். மேலும் நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு தினமாக ஏன் கொண்டாடக்கூடாது என்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விளக்கம் கொடுத்த நிலையில் அந்த நாளை தமிழர் இறையாண்மை நாளாக கருதுவதாக தெரிவித்துள்ளது.

