மாநில அரசுக்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடியே ஒப்புக்கொண்டு உள்ள நிலையில் ஆளுநர் ரவி இனி என்ன செய்யப் போகிறார் என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழகத்தில் மோடி நியமித்துள்ள ஆளுநர் ரவி தமிழக அரசின் உரையை வாசிப்பது கூட கிடையாது. ஆளுநரோடு முரண்பட்டபோதும் பேரவை நாகரிகம் கருதி முதல்வர் ஆளுநருக்கு மதிப்பளித்து சட்டப்பேரவையில் உரையாற்ற சபாநாயகர் மூலமாக  பேச அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால் நாகரிகம் என்றால் கிலோ எத்தனை ரூபாய் என்று கேட்கும் அளவுக்கு நடந்து கொள்ளும் ஆளுநர் ரவி பேரவை மாண்பை மதிக்காமல் உரையைப் படிக்காமல் உதாசீனப்படுத்தி விட்டார். மற்றபடி மாநில அரசு தயாரித்து கொடுக்கக்கூடிய உரையை தான் ஆளுநர் வாசிக்க வேண்டும். அதனை தான் நாமும் வலியுறுத்தினோம். மாநில அரசுக்கு கட்டுப்பட்டு ஆளுநர் ரவி செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை பிரதமர் மோடி ஒப்புக்கொண்டு உள்ளார். இனி ஆளுநர் ரவி என்ன செய்யப் போகிறார் என ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.