
சத்ரபதி சம்பாஜி நகரில் அமைந்துள்ள முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என அந்த மாநிலத்தின் வலதுசாரி அமைப்பினர் கூறி வருகின்றனர். மேலும் கடந்த 17-ஆம் தேதி வலதுசாரி அமைப்பினர் நாக்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இஸ்லாமியர்களின் புனித நூல் வாசகங்கள் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதனால் ஏற்பட்ட வன்முறையில் வாகனங்கள், தீவைத்து எரிக்கப்பட்டதோடு வீடுகள் சூறையாடப்பட்டது. இதில் 33 போலீசார் உட்பட பல காயமடைந்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 100-க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்தனர்.
இந்த நிலையில் சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் நிருபம் கூறியதாவது, நாக்பூர் வன்முறையில் ஈடுபட்டவர்களை வங்கதேசத்தில் கண்டுபிடிக்க முடியும். வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒருவர் நாச வேலைகளுக்கு சமூக வலைதளத்தை பயன்படுத்தி நிதி திரட்டி இருக்கிறார். உத்தப் பாலா சாகித் தாக்கரே கட்சி நிலைபாடுகள் அந்த கட்சி இந்து விரோத கட்சியாக மாறியதை எடுத்துக்காட்டுகிறது. நாகூர் வன்முறையில் வங்கதேசம் தொடர்பு இருப்பது பற்றி தற்போது எதுவும் கூற முடியாது என முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.