
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வைத்தியலிங்கம் மற்றும் பரமசிவன் என்ற சகோதரர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களை அக்காள் தங்கையான சரோஜா (62), இந்திரா (49) ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் பல வருடங்களாக கூட்டு குடும்பமாக வாழ்ந்து வரும் நிலையில் திடீரென சொத்து தகராறு ஏற்பட்டது.
இதனால் இரு குடும்பமும் தனித்தனியாக பிரிந்தனர். இந்நிலையில் குடும்பம் பிரிந்ததை அக்கா தங்கையால் தாங்கிக் கொள்ள முடியாததால் இருவரும் நேற்று முன்தினம் திடீரென தங்களுக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
அதாவது தங்கள் இறந்தால் குடும்பம் ஒன்று சேரும் என்ற நோக்கத்தில் அவர்கள் இருவரும் இப்படி ஒரு விபரீத முடிவு எடுத்துவிட்டனர். சம்பவத்தன்று இருவரும் ஒன்றாக தங்களுடைய வீடுகளில் இருந்து வெளியேறி இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்துள்ளனர். மேலும் இது குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.