
புதுச்சேரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கிய மூன்று இளைஞர்கள், பணம் கொடுக்க மறுத்து, கடையில் இருந்த ஊழியரை தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்த தகவல்கள் தற்போது பொது மக்களிடையே பேசப்பட்டு வருகிறது.
மூன்று இளைஞர்கள் மது போதையில் ஒரு பெட்டிக்கடைக்கு வந்து சிகரெட் வாங்கியுள்ளனர். கடையில் பணிபுரிந்த சந்திரன் என்பவரிடம் பணம் கேட்டபோது, இளைஞர்கள் யாரிடம் பணம் கேட்கிறாய்? என்று கேட்டு அவரை தாக்கியுள்ளனர். அவரைத் தடுக்க வந்த கடையின் உரிமையாளரையும் இளைஞர்கள் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.