ஹிண்டன்பர்க் அறிக்கை மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 22 ஆம் தேதி அனைத்து அமலாக்கத்துறை அலுவலக வாயிலிலும் இந்தப் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதானி குடும்பத்தின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செபி தலைவர் பதவி விலக வேண்டும் என போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அதானியின் மெகா ஊழல் குறித்த விசாரணை செய்யவேண்டும். இந்த ஊழலில் பிரதமரும் சம்பந்தப்பட்டுள்ளார். பங்குச் சந்தை ஒழுங்குமுறை இப்போது கடுமையாக சமரசம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு விஷயங்களை முன்னிறுத்தி தான் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.