
நாடாளுமன்ற மக்களவை முடிய உள்ள நிலையில் 18 வது மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி,
வாக்குச்சாவடிகளில் தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் கட்சிகள் குறித்து விமர்சிக்கலாம். ஆனால் போலியான வதந்திகள் எதுவும் பரப்பக் கூடாது.
சட்டவிரோதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதனைப் போலவே பணம், பொருட்கள் மற்றும் மது விநியோகம் செய்யப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்படும்.
வாக்குக்கு பணம் மற்றும் பொருள் என எதுவும் கொடுக்கக் கூடாது.
தேர்தல் நடைபெறும் போது வன்முறைகள் நடைபெறாமல் இருக்க வேண்டும்.
மாநில எல்லைகள் அனைத்தும் டிரோன் மூலமாக கண்காணிக்கப்படும். நாடு முழுவதும் சோதனை சாவடிகள் மூலமும் கண்காணிக்கப்படும்.
வேட்பாளர்கள் பற்றிய விவரங்களில் செயலி மூலமாக தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.
இரவு நேரங்களில் வங்கி வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லக்கூடாது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை முழுவதுமாக கண்காணிக்கப்படும்.
அரசியல் கட்சியினர் சமூக வலைத்தளங்களில் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
மதரீதியாக அல்லது தனிப்பட்ட முறையில் விமர்சித்து பரப்புரையில் ஈடுபடக்கூடாது. விளம்பரங்களை நம்பகத் தகுந்த செய்தியாக்க முயற்சிக்கக் கூடாது.
தேர்தல் பரப்புரையில் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை எக்காரணம் கொண்டும் ஈடுபடுத்தக் கூடாது.