நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் பல ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதாவது பொதுமக்கள் வாங்காத பொருட்களுக்கு பில் போடுவது மற்றும் எடை குறைவாக பொருட்கள் வழங்குவது, ரேஷன் பொருட்களை கள்ள சந்தையில் விற்பனை செய்வது என பல குளறுபடிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இது போன்ற குளறுபடிகளை தடுப்பதற்கு கட்டாயம் பொதுமக்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. தற்போது உத்திரபிரதேசம் மாநிலத்தில் மட்டும் 9500 பயனாளிகளின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனாளிகள் பீகார் மாநிலம் மற்றும் உத்திரபிரதேச மாநில நுகர்வோர் பட்டியலில் தங்களின் பெயரை பதிவு செய்து ரேஷன் பொருட்களை வாங்கி வந்த நிலையில் தற்போது 9,500 பயனாளிகளின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பயனர்களின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில் இன்னும் அதிக அளவிலான ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.