இந்தியாவில் தனிநபர் செலவினங்கள் தொடர்பாக குடும்பங்களின் நுகர்வு செலவின கணக்கெடுப்பு பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் நகர்ப்புறங்களில் ஒரு தனிநபரின் செலவு என்பது ரூ.26,459 ஆக இருக்கிறது. அதன் பிறகு கிராமப்புறங்களில் தனிநபர் செலவு என்பது‌‌ ரூ.3773 ஆக இருக்கிறது. இந்நிலையில் தனிநபர் செலவு செய்யும் பட்டியலில் ஒரு சில மாநிலங்களே  இடம்பெற்றுள்ள நிலையில் தமிழகமும் அந்த பட்டியலில் இருக்கிறது. இந்த பட்டியலின் படி தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நகர்ப்புறங்களில் தனிநபர் செலவினம் அதிகமாக இருக்கும் நிலையில், கேரளா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கிராமப்புறங்களில் தான் தனிநபர் செலவினம் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்கள் என இரண்டிலுமே தனிநபர் செலவினங்கள் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஒருவர் ரூ.7630 செலவு செய்யும் நிலையில் கிராமப்புறத்தில் ஒருவர் ரூ.5310 செலவு செய்கிறார். மேலும் இந்திய அளவில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் செலவுகள் வித்தியாசம் 71% இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையே 44 சதவீதம் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்