சென்னை எழும்பூர் தாய் சேய் அரசு நல மருத்துவமனையில் அதிநவீன செயற்கை கருத்தரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்துள்ளார். சுமார் 6.97 கோடி மதிப்பில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலவசமாக குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட இருக்கிறது.

இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் குழந்தை இல்லாத தம்பதிகள் செயற்கை கருத்தரிப்புக்காக செல்லும்போது சுமார் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை செலவாகிறது. இதனால் தற்போது நாட்டிலேயே முதல் முறையாக அரசு மருத்துவமனையிலேயே செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தை இல்லாத தம்பதிகள் இலவசமாக சிகிச்சை பெறலாம். மேலும் எழும்பூர் மருத்துவமனையைத் தொடர்ந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் செயற்கை கருத்தரிப்பும் மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.