
கோவை விமான நிலையத்தில் நேற்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரன் படத்தை பயன்படுத்துவதில் அரசியல் ஆதாயம் இருக்கிறது என்றால் அதனை நீங்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதானே? அனைத்து கட்சியினரும் பிரபாகரன் படத்தை போட்டுக் கொள்ளுங்கள். என் மீது 200 வழக்குகள் உள்ளது. ஒன்றரை வருடம் நான் சிறையில் இருந்து உள்ளேன். பாஸ்போர்ட்டை முடக்கி வைத்துக் கொண்டு எந்த நாட்டிலும் அனுமதிக்க மாட்டேன் என்கின்றனர். எனக்கு யாரிடம் இருந்தும் பாதுகாப்பு என்பது அவசியமில்லை. இந்த மக்களுக்காக களத்துக்கு வந்திருக்கின்றேன்.
நான்தான் இந்த மக்களுக்கு பாதுகாப்பு. காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் சைரன் வைத்த வாகனம் வேண்டாம் என்று வந்த வாகனத்தையும் திருப்பி அனுப்பி விட்டார். அரசியலில் மக்களோடு மக்களாக இருக்கும் நமக்கு பாதுகாப்பு என்பது தேவையில்லை. தம்பி விஜய் போல புகழ்பெற்ற நடிகருக்கு என்னை போன்று இருப்பது சிரமம் தான். அவரால் என்னைப் போன்று மக்களோடு நின்று பேச முடியாது. அதனால் அவர் பாதுகாப்பு கேட்டு வாங்கியுள்ளதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பாதுகாப்பு கொடுத்தால் விஜய் பாஜகவிற்கு சென்று விடுவார் என்பது சரியல்ல. அப்புறம் பாஜகவில் இருக்கக்கூடிய அண்ணாமலைக்கு எதற்கு பாதுகாப்பு என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.