
நியூசிலாந்து நாட்டிலுள்ள மக்கள் தற்போது வேறு நாடுகளுக்கு சென்று குடியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த நாட்டில் பொருளாதாரம் பற்றாக்குறை, வேலை வாய்ப்பின்மை மற்றும் வட்டி விகிதம் உயர்வால் அங்கு வாழும் மக்கள் இத்தகைய முடிவை எடுத்துள்ளனர். கடந்த வருடத்தில் மட்டும் 31,200 மக்கள் அந்த நாட்டிலிருந்து வெளியேறி வேறு நாட்டுக்கு சென்று குடியேறி உள்ளனர்.
தற்போது இந்த விவரங்கள் அனைத்தும் அந்நாட்டின் கணக்கெடுப்பின்படி தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கையானது இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு தற்போது அதிகமாக உயர்ந்துள்ளது. மேலும் நாட்டிலிருந்து வெளியேறிய மக்களில் பாதி பேர் ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.