
நாம் தமிழர் கட்சியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்று சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சாட்டை துரைமுருகன் பேசியதாவது, “2016 கட்சி தேர்தலில் நின்ற பிறகு எந்த ஒரு தேர்தலையும் நாம் தமிழர் கட்சி புறக்கணிக்கல. தேர்தலை புறக்கணிப்பது என்பது மக்களை அம்போ என்று விடுவதற்கு சமம். இங்கு திமுக ஆதரவு வாக்குகளை விட திமுக எதிர்ப்பு வாக்கு தான் இருப்பதிலேயே அதிகம். திமுக வாங்கினது ஒரு லட்சத்து ஐயாயிரம் ஓட்டு. மீதி ஒரு லட்சத்தி 15 ஆயிரம் வாக்குகள் திமுக எதிர்ப்பு வாக்கு. திமுக எதிர்ப்பு வாக்குகள், திமுகவை விரும்பாதவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறுவது எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது
நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடாதவர்களுக்கு 2000 ரூபாயாம். உன்னை எங்கு கொண்டு போய் நிப்பாட்டிருக்கேன் பாத்தியா டா. டேய் மஞ்சள் துண்டு, கருப்பு துண்டு, பெரியார், ஈ.வே.ரா என்று சொன்ன உன்னை எங்கு கொண்டு போய் விட்டிருக்கிறது பார்த்தியா? எங்களை வீழ்த்த 2000 ரூபாய் கொடுத்தாயோ? எங்க பெயரை கூட உச்சரிக்க உனக்கு தெம்பு இல்ல” என்று பேசியுள்ளார்.