நாம் தமிழர் கட்சியோடு கூட்டணி வைப்பதற்கு அதிமுகவினர் விருப்பம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இதற்கு சீமான் விளக்கமளித்துள்ளார்.  செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 2007க்கு முன்பாக திமுகவில் இருந்தவன் நான். ஆனால் என் கண் முன்பாக காங்கிரஸ் உடன் சேர்ந்து திமுக இனப்படுகொலை நடத்தியது.

அதிமுகவினர் திமுகவை எதிர்க்கிறார்களோ இல்லையோ நான் எதிர்க்கிறேன். எனக்கு ஆதரவாக பேசிய அவர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார். மேலும் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை அவர் திட்டவட்டமாக கூறவில்லை.