மும்பையை சேர்ந்த சாகர் சிங் என்பவர் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வைத்துள்ளார். இவர் அந்த ஸ்கூட்டரை வாங்கிய நாள் முதல் பலமுறை அதில் கோளாறு ஏற்பட்டு பராமரித்து வந்துள்ளார். ஸ்கூட்டரை விற்பனை செய்த ஓலா நிறுவனமோ விற்பனைக்கு பின் எந்த சேவையும் செய்து கொடுக்கவில்லை. ஸ்கூட்டரும் நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே வந்துள்ளது.

இதனால் விரட்டி அடைந்த சாகர் சிங் தனது ஸ்கூட்டரை தள்ளுவண்டி ஒன்றில் ஏற்றி ஓலா ஸ்கூட்டர் ஷோரூம் முன்பு சென்று சோகமான பாடல் ஒன்றை பாடியபடி ஸ்கூட்டருக்கு இறுதி ஊர்வலம் போன்ற நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் வேடிக்கையாக பார்த்துக் கொண்டிருந்தனர். தற்போது இந்த காணொளி சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது.