
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு கூலி தொழிலாளிக்கு 314 கோடி ரூபாய் வருமான வரி நோட்டீஸ் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 ரூபாய் சம்பளம் வாங்கி வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவருக்கு வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீஸ் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூலித்தொழிலாளியான சந்திரசேகருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது அவருக்கும், அவரின் குடும்பத்திற்கும் பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இவருடைய பெயரில் அதிக அளவிலான நிலம் இருப்பதாக கூறி வருமானவரித்துறை கேட்டபோது அந்த நிலம் வேறு ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
நான்கு வருடங்களுக்கு முன்பாக வங்கி கணக்கு ஒன்றை திறந்து உள்ளார் சந்திரசேகர். அதில் சிறிய தொகையை போட்டு வைப்பதற்காக பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது வங்கியில் ஒரு முகவர் அவரிடம் இருந்து மொபைல் எண்ணை வாங்கியுள்ளார்என்றும், ஆனால் வாங்கிக்கணக்கோடு கணக்கோடு இணைக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த நோட்டீஸ் 3 கோடி மதிப்பிலான சந்திரசேகர் பெயரிலான சந்தேகத்திற்குரிய பணபரிமாற்றத்தின் அடிப்படையில் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் யாரோ அவருடைய பெயரை பயன்படுத்தி மோசடி செய்திருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.