பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் பேசியது திமுகவினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இது பற்றி அவர் கூறியதாவது, உதயநிதி ஸ்டாலினுக்கு நான் சொல்கிறேன். நீ சரியான ஆளாக இருந்தால் நீ சரியான ஆளாக இருந்த அப்படின்னா உன் வாயிலிருந்து கெட் அவுட் மோடி என்று சொல்லி பாரு பார்ப்போம். எங்க அப்பா முதலமைச்சர். எங்க தாத்தா ஐந்து முறை முதலமைச்சருன்னு நீ தைரியம் இருந்தால் சொல்லு பார்ப்போம். வாயிலிருந்து எங்க தாத்தா ஐந்து முறை முதல்வர் எங்க அப்பா சிட்டிங் முதல்வர் நான் துணை முதல்வர் என்று சொல்லி பார் பார்ப்போம் என்று கூறினார்.

அதாவது முன்னதாக உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசிடம் பேசி நிதி வாங்கி தர முடியாத இவர்கள் எல்லோரும் பேசுகிறார்கள். கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு வந்த மோடி சுவற்றை உடைத்துக் கொண்டு திருட்டுத்தனமாக சென்றார். வீட்டில் சுவரொட்டி ஒட்டுவதாக அண்ணாமலை கூறிய நிலையில் முடிந்தால் வர சொல்லுங்கள். ஏற்கனவே அண்ணா அறிவாலயத்தை ஏதோ செய்வதாக கூறினார். தைரியம் இருந்தால் அண்ணா சாலை பக்கம் வர சொல்லுங்க பார்ப்போம் என்று சவால் விடும் விதமாக பேசியிருந்தார். இதற்கு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பதிலடி கொடுத்தார்.

இது பற்றி அவர் கூறியதாவது, நாளை காலை அண்ணா சாலைக்கு நான் வருகிறேன். முடிந்தால் திமுகவின் மொத்த படையையும் வைத்து என்னை தடுத்து பாருங்கள். தமிழ்நாட்டிற்கு ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் ஒரே ஒரு நிதியை மட்டும் தான் மத்திய அரசு வழங்கவில்லை. மற்ற அனைத்து திட்டங்களுக்கும் நிதி வழங்கப்படுகிறது. உங்க அப்பன் வீட்டு பணத்தில்லையா காலை உணவு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்றார். மேலும் திமுகவினர் கெட் அவுட் மோடி என்று பதிவிட்டுள்ள நிலையில் நாளை காலை 6 மணிக்கு நானே கெட் அவுட் ஸ்டாலின் என்று பதிவிடுவேன் என்று கூறினார்.