தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஜய் தற்போது ஹேச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் தனது 69 ஆவது திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா நடிக்கிறார். விஜயின் 69 வது திரைப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.

இன்று குடியரசு தின விழாவை முன்னிட்டு விஜயின் 69-ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியானது. இந்த படத்திற்கு ஜனநாயகம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் ஜன நாயகன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் நான் ஆணையிட்டால் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அதனை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.