
நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இளம்பெண் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சித்ரா என்பது தெரியவந்தது. அவருடன் தங்கி இருந்தவர் அருள் பாண்டியன்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அருள் பாண்டியனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அருள் பாண்டியன் கூறியதாவது, கருத்து வேறுபாடு காரணமாக எனது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதேபோல சித்ராவும் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். வேலைக்கு செல்லும்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் வெப்படை சந்தைப்பேட்டையில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து கணவன் மனைவி போல வாழ்ந்தோம்.
இந்த நிலையில் வேறு ஒருவருடன் சித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருடன் பேசுவதை நிறுத்துமாறு பலமுறை கூறினேன். அதனை சித்ரா கண்டு கொள்ளவில்லை. எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டே இருந்ததார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது கோபத்தில் சித்ராவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டேன் என அருள்பாண்டியன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.