
தமிழ் சின்னத்திரை சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரச்சிதா. இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார். அதன் பிறகு சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். பிறகு பிரிவோம் சந்திப்போம் சீரியலில் தனது ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இந்த ஜோடி சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
கடந்த பிக் பாஸ் சீசனில் ரச்சிதா போட்டியாளராக கலந்து கொண்டு நன்றாக விளையாடினார். தற்போது படங்கள் மற்றும் சீரியல் என பிசியாக இருக்கும் இவர் இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் இறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனவே என் வாழ்க்கையை நான் விரும்பும் படி வாழவிடுங்கள் என்று ஒரு பதிவை பகிர்ந்து உள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் எதற்காக இப்படி சோகமா போஸ்ட் போட்டு இருக்கீங்க உங்களுக்கு அப்படி என்ன நடந்தது என கேள்வி கேட்டு வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க