
ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ரோஹித் சர்மாவின் வீடியோ வைரலாகி வருகிறது.
ராஜ்கோட்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது தெரிந்ததே. ஆனால் முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஆனால் இந்த போட்டிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
ரோஹித் என்ன செய்தார்?
இந்த தொடரின் முதல் 2 போட்டிகளுக்கு ரோஹித் சர்மா இல்லாத இந்திய அணிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக இருந்தார். இந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கேப்டனாக மட்டுமின்றி தனி நபராக போட்டியிலும் ராகுல் சிறப்பாக செயல்பட்டார். இந்நிலையில் 3வது ஒருநாள் போட்டிக்குப் பிறகு, இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவை வெற்றிக் கோப்பையை பரிசளிப்பு விழாவில் பெற ஹர்ஷ் போக்லே அழைத்தார்.
ஆனால் ரோஹித் தனது நல்ல உள்ளத்தை இங்கே காட்டினார். அதாவது கோப்பையுடன் போட்டோ எடுக்கும்போது ரோஹித் சர்மா ராகுலை மட்டும் கோப்பையை பிடித்து போஸ் கொடுக்குமாறு ஊக்குவித்தார். கே.எல் ராகுல் கோப்பையை பிடிக்க ரோஹித் சர்மாவையும் அழைக்கும் விதமாக நீட்டியபோது, அதனை மறுத்து அருகில் நின்றார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் ஹிட்மேனை பாராட்டி வருகின்றனர்.
Video of the day….!!!!
– This shows how Rohit Sharma look & treat each and every player in the team. A great character & inspiration. pic.twitter.com/HtiHPJwBZn
— Johns. (@CricCrazyJohns) September 27, 2023