
இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட இசை நிறுவனங்களின் வழக்கறிஞர், தயாரிப்பாளர்களிடம் பணம் பெற்ற பிறகு இசையமைப்பாளர் பாடல்களை எப்படி உரிமை கோர முடியும் என கேள்வியெழுப்பினார். ஸ்பாட்டிஃபை மூலம் இளையராஜா பெற்ற வருமானத்தை தனி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் என வாதிட்டார்.
அதற்கு இளையராஜா தரப்பு வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட எதிர் தரப்பு வக்கீல் இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் என்று தன்னை நினைப்பதாக குறிப்பிட்டார். அதற்கு இளையராஜா தரப்பு ஆம் நான் எல்லாருக்கும் மேலானவன்தான். இதனை வீம்புக்காக சொல்லவில்லை என கூறினார்.