
பதினெட்டாவது ஐபிஎல் சீசன் திருவிழாவானது கடந்த 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. கொல்கத்தாவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும், பெங்களூரு அணியும் மோதியதில் பெங்களூரு அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஐந்து முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது.
156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியானது 19.1 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக பந்து வீசிய சிஎஸ்கே வீரர் நூர் அகமது ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார். இந்த நிலையில் ஆட்டநாயகன் விருதுடன் நூர் அகமது குறித்து வீடியோ ஒன்றை சிஎஸ்கே வெளியிட்டுள்ளது. அதில் ரஜினி நடித்த பாட்ஷா படத்தின் பிரபலமான டயலாக் ஆன “நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி” என்ற டயலாக்கை நூர் அகமது பேசி உள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் இந்த வீடி Baasha of spin என்ற தலைப்பிடப்பட்டுள்ளது.
Ahmad…Noor Ahmad 🗿
The Baasha of spin! 🦁💥#CSKvMI #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/F1g8iXYn9s— Chennai Super Kings (@ChennaiIPL) March 24, 2025