டிரம்ப் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று  தாக்குதல் நடந்துள்ளது. இதில், காதில் குண்டு பட்டதில் அவர் காயமடைந்தார். உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபரை அவரது சிறப்பு பாதுகாப்பு படை சுட்டுக்கொன்றது. மேலும் இதில் காயமடைந்த டிரம்ப் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் தற்போது நலமுடன் உள்ளார்.

இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு ஊடகத்திற்கு டிரம்ப் அளித்த முதல் பேட்டியில்,”கடவுளாலோ அல்லது அதிர்ஷ்டத்தாலோதான் நான் உயிர் பிழைத்தேன். AR-15 ரக துப்பாக்கியால் சுடப்பட்டு யாரும் உயிர் பிழைத்ததாக இதுவரை கண்டதில்லை என்று எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர் கூறினார்.  நான் சரியான நேரத்தில், சரியான முறையில் தலையைத் திருப்பினேன். இல்லையெனில், தோட்டா என் மூளையைத் துளைத்திருக்கும் என்று கூறியுள்ளார்.