
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் த்ரிஷா. இவர் தற்போது விடாமுயற்சி, தக் லைஃப், குட் பேட் அக்லீ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான கோட் படத்தில் மட்ட என்ற பாடலில் குத்தாட்டம் ஆடியிருந்தார்.
இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இவர் ஒரு படத்திற்கு ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
இவர் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன் மாடலிங் செய்து வந்தார். அப்போது அவர் ஒரு நேர்காணலில் நான் சினிமாவிற்கு நடிக்க வரமாட்டேன்.மாடலிங் மட்டும் தான் செய்வேன் என்று கூறினார். ஆனால், அதன் பின் அவர் நடித்து வந்த நிலையில் தற்போது 20 வருடங்களாக முன்னணி நடிகையாக ஜொலிக்கிறார். மேலும் அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.