டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் சச்சின் என்பவர் தனது மனைவி கவிதாவுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சச்சின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சச்சின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கே அழுகிய நிலையில் சடனமாக சச்சின் இருந்துள்ளார்.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது மனைவி கவிதாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் சச்சினை கவிதா தான் கத்தியால் குத்தி கொலை செய்தார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கவிதா “நான் தானே நிறைய கஷ்டப்பட்டேன்” என்றும் தனக்கு ஏற்பட்ட கொடுமைகளால் தான் இது போன்று செய்ததாகவும் காவல்துறையினரிடமே கூறியுள்ளார்.