திண்டுக்கல் மாவட்டம் ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி சிவசக்தி. இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த சிவசக்திக்கு கடந்த 16-ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது.

அன்று இரவே அவருக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. 19-ஆம் தேதி தாயும் குழந்தையும் வீடு திரும்பினர். ஏப்ரல் 20 ஆம் தேதி மர்மமான முறையில் குழந்தை உயிரிழந்ததால் வீட்டிற்கு பின்புரம் ரகசியமாக புதைத்து விட்டனர்.

இதுகுறித்து அறிந்த அதிகாரிகள் வீட்டிற்கு சென்று சிவசக்தியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது தம்பதியினர் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என ஆசைப்பட்டனர்.

ஆனால் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால் கோபத்தில் குழந்தையை கொலை செய்து வீட்டிற்கு பின்புறம் புதைத்தது தெரியவந்தது. இதனால் சிவ சக்தியை போலீசார் கைது செய்து குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது