
கர்நாடக மாநிலத்தின் பெல்காவி மாவட்டத்தில் நடைபெற்ற SSLC (10ஆம் வகுப்பு) தேர்வில் பங்கேற்ற சில மாணவர்கள், பரீட்சையில் வெற்றி பெற எப்படியாவது முயற்சிக்க வேண்டும் என்ற மனநிலையுடன், அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் பதில்தாளில் நேரடி கோரிக்கைகள் மற்றும் பணமும் சேர்த்து வைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வெளியான தகவலின்படி, சில மாணவர்கள் “பாஸ் பண்ணுங்க, என் காதல் உங்கள் கையில் தான்”, “நான் பாஸ் ஆனால்தான் என் காதல் தொடரும்” என உருக்கமான கோரிக்கைகளை எழுதி வைத்துள்ளனர்.
இதை மேலும் உற்சாகமாக்க, ஒருவர் ரூ.500 பணத்தை பதில்தாளுடன் வைத்து, “இந்த ₹500 எடுத்துட்டு டீ குடிங்க சார், பாஸ் பண்ணுங்க” என எழுதியிருக்கிறார்.
மேலும், “நீங்க பாஸ் பண்ணினா பணம் தர்றேன்” எனும் வாக்குறுதியும் சில மாணவர்களின் பதில்தாள்களில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு மாணவர், “நீங்க பாஸ் பண்ணலனா, என் பெற்றோர்கள் என்னை கல்லூரிக்கு அனுப்ப மாட்டாங்க” என கண்களைக் குளிரச்செய்யும் உருக்கமான விண்ணப்பத்தையும் எழுதியுள்ளார்.
இந்த சம்பவங்களை HT.com தளம் தனியாகச் சுயமாக சரிபார்க்கவில்லை என தெரிவித்துள்ளது.
இது கல்வித்துறை தரத்தையும் மாணவர்களின் மன அழுத்த நிலையும் குறித்து சிந்திக்கவைக்கும் பரிதாபமான நிலையாகியுள்ளது.