
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் விஜயசாந்தி. இவர் தமிழில் கல்லுக்குள் ஈரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் மன்னன், ராஜாங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவிலும் அதிக படங்களில் நடித்துள்ள விஜயசாந்தி மலரும் நினைவுகளாக சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, நான் அனைத்து மொழிகளிலும் சுமார் 180 படங்களுக்கும் மேல் நடித்துள்ளேன். நான் வாங்கிய முதல் சம்பளம் 5000 ரூபாய். ஆனால் படப்பிடிப்பு முடிவடைந்த உடன் 3000 ரூபாய் தான் கொடுத்தார்கள்.
அதன் பிறகு கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாக உயர்ந்தேன். அந்த காலத்தில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் 3 நடிகர்களில் ரஜினிகாந்த் அமிதாப்பச்சன் ஆகியோருடன் நானும் இருந்தேன். இது எனக்கு மிகவும் பெருமையான விஷயம். நான் ரஜினிக்கு சமமாக சம்பளம் வாங்கினேன். நான் பலமுறை செத்துப் பிழைத்து இருக்கிறேன். ஒரு முறை விமான விபத்து. மேலும் மற்றொரு முறை ஆற்றில் அடித்து செல்லப்பட்டதோடு, ஒருமுறை தீயிலும் மாட்டிக் கொண்டு உயிர் பிழைத்தேன் என்று கூறியுள்ளார்.