
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவை விட்டு விலகினார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நடிகை ஜோதிகா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் சைத்தான் மற்றும் ஸ்ரீகாந்த் போன்ற ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ஜோதிகா முதலில் ஹிந்தி படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான நிலையில் அதன் பிறகு பாலிவுட் சினிமாவில் நடிக்கவில்லை. இதற்கான காரணம் குறித்து தற்போது ஒரு பேட்டியில் நடிகை ஜோதிகா கூறியுள்ளார். அதாவது நடிகை ஜோதிகா முதலில் நடித்த ஹிந்தி படம் தோல்வியடைந்ததால் அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. அதே சமயம் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்துள்ளது. மேலும் இதனால்தான் அவர் தென்னிந்திய சினிமாவில் மட்டும் நடித்துள்ளார்.