
அதிமுக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் அதிமுகவில் ஒரு குறுநில மன்னர் போல் செயல்படுவதாக கூறியிருந்தார். அதாவது நேற்று விருதுநகரில் நடைபெற்ற பொது கூட்ட நிகழ்ச்சியின் போது நிர்வாகி ஒருவர் மாபா. பாண்டியராஜனுக்கு மேடையில் சால்வை அணுவித்ததால் கோபத்தில் ராஜேந்திர பாலாஜி அவரை கன்னத்தில் அறைந்தார். இது பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் அவரை குறுநில மன்னர் என்று பாண்டியராஜன் விமர்சித்திருந்தார். இதற்கு தற்போது ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது, நான் மாவட்ட செயலாளராக இருக்கும்போது பாண்டியராஜனுக்கு மட்டும் சால்வை அணிவித்தால் சும்மா விடுவேனா.?
அவருக்கு சால்வை அணுவித்ததால் தான் அந்த நிர்வாகியின் கன்னத்தில் அறைந்தேன். நீ செய்வதை சும்மா பார்த்துக் கொண்டே இருக்க நான் ஒன்னும் கிறுக்கனோ அல்லது பைத்தியக்காரனோ கிடையாது. கட்சியை காட்டிக் கொடுத்தவர் பாண்டியராஜன். எனக்கு ஒரு தனி வரலாறு இருக்கும் நிலையில் உனக்கு என்ன வரலாறு இருக்கிறது. அதிமுகவில் நான் ஒரு குறுநில மன்னர் தான். எனக்கு பின்னால் உள்ள அதிமுக தொண்டர்கள் வாள் ஏந்திய படை வீரர்கள். என்னை பற்றி பேச வேண்டும் என்றால் விருதுநகரில் பேச வேண்டும். அவர் எதற்காக சென்னைக்கு போய் பேசுகிறார். விருதுநகர் மாவட்ட அதிமுகவில் என்னை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது. மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளேயும் வெளியேயும் குழி பறிக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்றார்.