தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது த.செ. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன்  என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் சமீபத்தில் படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பற்றி வருகிறது. இந்நிலையில் தற்போது வேட்டையன் திரைப்படம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் நெகிழ்ச்சி கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தமிழ் சினிமாவின் பெரும் புகழ் கொண்ட ஐயர் ரஜினிகாந்த் நடித்த உள்ள வேட்டையன் திரைப்படம் சமூக அவலங்களை கண்முன்னே நிறுத்துவதாக அமைந்துள்ளது. இந்த படத்தின் மூலம் பொழுதுபோக்கிற்காக மட்டும் திரைப்படம் அல்ல சமூக அவலங்களை படங்கள் எடுத்துரைக்கும் என்பதை காட்டியுள்ளது.

ஜெய் பீம் திரைப்படத்தின் மூலம்  மாபெரும் வெற்றியை தொடர்ந்து தம்பி ஞானவேல் இந்த படத்தையும் வெற்றிப்படமாக இயக்கியுள்ளார். நான் எதிர்பார்த்தது போன்றே சமூக அக்கறை உள்ள படமாக வேட்டையன் அமைந்துள்ளது. நாட்டில் கல்வியின் பெயரால் நடைபெறும் கட்டண ‌ கொள்ளை குறித்தும் என்கவுண்டர் என்ற பெயரில் நீதியும் மனிதமும் ஒரு சேர கொல்லப்படுவது குறித்தும் நான் பல மேடைகளில் பேசிய கருத்தினை வேட்டையன் திரைப்படத்தில் பார்த்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திய நாட்டின் இரு பெரும் உச்ச நட்சத்திரங்களை கொண்டு தான் சொல்ல வந்த கருத்தை சிறப்பான முறையில் வேட்டையன் திரைப்படத்தின் மூலம் சொல்லியுள்ளார். மேலும் சமூக அக்கறை கொண்ட திரைப்படமான வேட்டையன் மாபெரும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.