தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நமீதா. இவர் பெரும்பாலும் படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடிப்பார். இவருக்கு திருமணமான நிலையில் இரட்டை குழந்தைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய நமிதா சென்னையில் நடந்த ஒரு கடை திறப்பு விழாவில் தற்போது கலந்து கொண்டார். அந்த விழாவில் நடிகை நமீதா பேசியதாவது, எனக்கு குழந்தைகள் பிறந்து 2 வருடங்கள் ஆகிறது.

இதனால் நான் தற்போது மீண்டும் நடிப்பதற்கு தயாராகி வருகிறேன். தற்போது ஒரு படத்தில் வில்லியாக நடித்து வருகிறேன். இனி 100 சதவீதம் படங்களில் கவர்ச்சி காட்டக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். ரசிகர்கள் தொடர்ந்து என்னை ரியாலிட்டி ஷோக்கல், சின்னத்திரை போன்றவைகளில் பார்க்கலாம். மேலும் நடிகை நமீதா கூறியது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.