
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக ரயிலில் பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப இந்திய ரயில்வே துறை அவ்வபோது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய ரயில்வே துறை நிர்வாகம் நமது பெயரில் முன்பதிவு செய்த திட்டத்தை குடும்ப உறுப்பினரின் பெயருக்கு மாற்ற அனுமதிக்கிறது.
யாருடைய பெயருக்கு டிக்கெட் மாற்றப்படுகிறதோ அவர் உங்களின் ரத்த உறவாக இருக்க வேண்டும். ரயில்வே விதிகளின் படி, ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் முன்பதிவு செய்யப்பட்டாலும் ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்டருக்கு நேரடியாக வந்து மட்டுமே பெயர் மாற்றம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.