2025 IPL சீசனில் சிஎஸ்கே அணியை மேலும் பலப்படுத்துவதற்கு ஒரு சிறப்பான ஆயுதம் திரும்பி வந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் அதுதான் அஸ்வின் ரவிச்சந்திரன். ஒன்பது வருடத்திற்கு பிறகு தன்னுடைய சொந்த மண்ணான சென்னையில் மீண்டும் இணைந்துள்ளார். இந்த நிலையில் ஐபிஎல் 205 இல் சிஎஸ்கே வெற்றிக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை பார்க்கலாம். அஸ்வின் ஐபிஎல் தொடரில் 2009இல் சிஎஸ்கே மூலமாக அறிமுகமானார். 212 போட்டியில் இதுவரை விளையாடியிருக்கும் அவர் 180 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.  2024 ஆம் வருடம் ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னையில் அவருடைய செயல்பாடு   சற்று குறைவாக இருந்தாலும் சென்னையில் சுழலுக்கு ஏற்ப சேப்பாக்கம் மைதானத்தில் அவருடைய பங்களிப்பானது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது சந்தேகமில்லை.

சேப்பாக்கத்தில் இதுவரை அஸ்வின் 42 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வின் பவர் பிளேபவர்களில் பந்துவீசி ரன்கள் கட்டுப்படுத்துவதிலும், மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும், தேவைப்பட்டால் டெத் ஓவர்களில் புத்திசாலித்தனமாக பந்து வீசுவதிலும்  திறமையானவர்.  38 வயதான அஸ்வின் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் அரங்கில் அவருடைய அனுபவம் சிஎஸ்கே இளம் வீரர்களுக்கு ஒரு உந்துகோலாக இருக்கும்.