ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் உள்ள ஒரு விக்டோரியன் விலங்குகள் பாதுகாப்பு மையத்தில் பணியாற்றிய 48 வயது ஜோஅன்னா கின்மன் (Joanna Kathlyn Kinman), மனித விரல்களை ஆன்லைன் கறுப்புச் சந்தையில் விற்பனை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் 2024 பிப்ரவரியில் நடந்துள்ளது. இவருடைய வீட்டில் இருக்கும் இரண்டு நாய்கள், தங்கள் உரிமையாளர் இயற்கை காரணங்களால் உயிரிழந்த பின்னர், அவரது உடலை உண்டு தின்று விட்டு, சில பகுதிகளை வாந்தி எடுத்துள்ளன. இந்த நிகழ்வை கவனித்த கின்மன், அந்த உடல் உறுப்பு பகுதிகளை எடுத்து, ப்ரிசர்வ் செய்து $400க்கு விற்பனை செய்ய திட்டமிட்டார்.

மனித உடல் உறுப்புகளை சேகரித்து விற்பனை – “Bone Buddies Australia” குழுவில் சிக்கிய தகவல்!

கின்மன், “Bone Buddies Australia” என்ற சமூக வலைத்தள குழுவில் செயல்பட்டு வந்தார், இது ஆன்லைனில் விலங்குகள் எலும்பு, தசைகள், மற்றும் பிற அமைப்புகளை வாங்க, விற்க மற்றும் பரிமாற்ற பயன்படும் ஒரு குழுவாகும். அதிகாரிகள் இவரை தீவிரமாக கண்காணிக்க, முன்னதாகவே சில “wet specimens” (இறந்த உயிரின எச்சங்கள்) விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இவருடைய வீட்டு சோதனையில் மனித விரல்கள் மட்டுமின்றி, அண்ணான்கொம்பு, பறவை ஒடிப்பம், கின்னிப் பன்றி பாதம், குழந்தைகளின் பற்கள் உள்ளிட்ட பல விசித்திர பொருள்கள் மீட்கப்பட்டன.

“இது தவறு என்று தெரியாததா?” – நீதிபதி ஆச்சர்யம்!

நீதிமன்ற விசாரணையின் போது, “இது தவறு என்பதை அவர் உணரவில்லை என்பதுதான் ஆச்சரியமானது,” என நீதிபதி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “ஒரு இறந்த மனிதனின் விரல்கள், நாய்கள் வாயில் இருந்து வாந்தியாக வெளியேறிய பிறகு அதை எடுத்து விற்க முயற்சிப்பது எவ்வளவு உச்சநிலையான தவறான செயலாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக, கின்மன் தனது வேலையையும் இழந்துள்ளார். இவர் உளவியல் மற்றும் விலங்கியல் பற்றிய படிப்புகளை முடித்திருந்தாலும், இத்தகைய செயல்களை எதற்காக செய்தார் என்பது இன்னும் புரியவில்லை என நீதிபதி தன் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.