
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக விபரீதமான பல ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுகிறார்கள். அந்த வகையில் தற்போது சில வாலிபர்கள் கஞ்சா புகைப்பது போன்று ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதாவது பழனியைச் சேர்ந்த 4 வாலிபர்கள் இப்படி வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் முதலில் ஒரு வாலிபர் கையில் கஞ்சாவை வைத்து கசக்குகிறார்.
பின்னர் அதை பீடியில் வைத்து புகைக்கிறார். அதன் பிறகு மற்றொரு வாலிபரும் அப்படி செய்கிறார். உடனடியாக அந்த வாலிபர் மயங்கி விழுந்த நிலையில் அவரை மற்றவர்கள் சேர்ந்து தூக்கி செல்வது போன்று அந்த வீடியோ இருக்கிறது. இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பழனி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்கள் வீடியோவில் புகைத்தது உண்மையாகவே கஞ்சாவாக இருந்தால் அவர்களிடம் அது எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுவதோடு அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.