
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக ஏழை விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளில் ஒரு வருடத்திற்கு மட்டுமே 6000 ரூபாய் வரை உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறும் நிலையில், இதுவரை 16 தவணைகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு, முதல்முறையாக நாளை தொகுதி மக்களை பிரதமர் மோடி சந்திக்கிறார். அதன்பின்னர், அங்கு நடைபெறும் விழாவில், பிஎம் கிசான் திட்டத்தின் 17வது தவணையை விடுவிக்கிறார். பிஎம் கிசான் திட்டத்தில் 9.26 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் தலா ரூ.2000 தொகையை பெறுவார்கள். அதுமட்டுமின்றி கிருஷி சாகிஸ் பயிற்சி அளிக்கப்பட்ட 30,000 சுயஉதவிக் குழுக்களுக்கும் சான்றிதழ்களையும் வழங்குகிறார்.