
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் நக்கீரன் கோபாலுக்கு நேற்று பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. அதாவது கடந்த 2010 ஆம் ஆண்டு நித்தியானந்தா மற்றும் நடிகை ரஞ்சிதா இருவரும் ஆசிரமத்தில் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ வெளியவதற்கு முன்பாக நக்கீரன் தரப்பும் அதனை வைத்திருந்தவர்களும் நித்தியானந்தா விடம் பணம் கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாக நக்கீரன் கோபால் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர்கள் மீது குற்றத்தை தாக்கல் செய்தனர். மேலும் இதைத் தொடர்ந்து நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது நக்கீரன் கோபாலுக்கு நீதிமன்றம் பிடிவாண்டு பிறப்பித்த உத்தரவிட்டுள்ளது