
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் அச்சுறுதலை ஏற்படுத்தி வந்த நிலையில் அதன் எல்லை பகுதிகளில் உள்ள புதுவையின் மகே பிராந்தியத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதால் அங்கு செப்டம்பர் 25ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா தளங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகளுக்கு விதித்த கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டதுடன் பொது இடங்களில் பொதுமக்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.