
தமிழக சட்டப்பேரவையில் நடந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர் பாலு, ஆ. ராசா, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் இன்று ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து ஆளுநருக்கு எதிராக புகார் அளித்தனர். ஆளுநர் மரபுகளை மீறி செயல்படுகிறார் அவருக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும் என்றெல்லாம் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜனாதிபதியை சந்தித்த தமிழ்நாடு எம்பிக்கள் குழுக்கள் நியாயத்தை சொல்லி இருக்கிறார்கள். ஆனால் நியாயம் கிடைக்குமா என்று தெரியவில்லை. மத்திய அரசு ஆளுநரை பின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.