பிரபல நடிகையாக வலம் வருபவர் பிந்து மாதவி. பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழைப்போலவே தெலுங்கிலும் ஒளிபரப்பாகின்றது. தெலுங்கில் நாகார்ஜுனா தொகுத்து வழங்குகின்றார். ஏற்கனவே தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானர் பிந்துமாதவி. தற்போது தெலுங்கு பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலை வெற்றி பெற்றார். இவர் தமிழில் சிவகார்த்திகேயன், விமல், சிபிராஜ் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார்

இந்நிலையில் கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிக்கத் தயார் என நடிகை பிந்து மாதவி தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வரும் பிந்து மாதவியிடம் பேட்டி ஒன்றில் நடிகைகள் நிர்வாணமாக நடிப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, பட வாய்ப்புக்காக யாரும் நிர்வாணமாக நடிப்பதில்லை. கதைக்கு தேவைப்பட்டால் அப்படி நடிப்பதில் தவறில்லை. அதுபோன்ற கதாபாத்திரம் எனக்கும் வந்தால் நானும் அப்படி நடிக்க ரெடி என்றார்