திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் கலையரசன். இவர் சோசியல் மீடியா மூலம் அதே பகுதியை சேர்ந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பேசியுள்ளார்.

ஒரு நாள் கலையரசன் மாணவியின் போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து வாட்ஸ் அப்பில் தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் கலையரசன் மாணவிக்கு மார்பிங் போட்டோவை அனுப்பி பாலியல் தொந்தரவு அளித்து மிரட்டியுள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரியின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் கலையரசன், அவரது நண்பர்களான ரஞ்சித், சந்தோஷ், இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் ஐந்து பேரை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.