
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்திற்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. அதாவது சங்கங்களை பதிவு செய்யக்கூடிய சட்டத்தின் கீழ் ஜாதிகளை மையப்படுத்தி உருவாகும் சங்கங்களை பதிவு செய்யலாமா.? பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருக்கக்கூடிய ஜாதி பெயர்கள் நீக்கப்படுமா என்பது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதன்பிறகு பள்ளிகளில் சேர்க்கும் போது ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று படித்த பாடலுக்கு ஏற்ப நாம் நடந்து கொள்ள வேண்டாமா.? குறிப்பிட்ட ஜாதியினர் மட்டும்தான் சங்கங்களுக்குஉறுப்பினர்களாக இருக்க முடியும் என்ற விதியை திருத்த வேண்டும் என்று ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வெறும் காகிதங்களில் மட்டும் தான் இருக்கிறதே தவிர இதுவரையில் எந்த சங்கங்களும் அதனை செயல்படுத்தவில்லை.
பள்ளிகளில் ஜாதி இருக்கக் கூடாது என்று முன்னாள் சந்துரு கொடுத்த அறிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் இன்னும் பள்ளிகளில் ஜாதிப் பெயர்கள் இருக்கத்தான் செய்கிறது. இதனை அரசு நீக்கவில்லை. கோர்ட் உத்தரவுக்கு பிறகு கூட ஜாதியை தூக்கிப் பிடிப்பவர்கள் அதனை ஒருபோதும் கீழே இறக்க மாட்டார்கள். நிலவுக்கு போனா கூட ஜாதியை தூக்கிக் கொண்டுதான் போவார்கள். படிப்படியான மாற்றத்தை கொண்டுவர வேண்டிய நேரம் இது என்று நீதிபதி கூறினார். இது தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று கூறி மார்ச் 14ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளனர். மேலும் கை ரிக்ஷாவை ஒழித்தது முதல் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்த திமுக அரசு இந்த விஷயத்தில் ஒரு நல்ல முடிவு எடுத்தால் வரலாறு அதனை என்றென்றும் நினைவில் வைத்துக் கொள்ளும் என்று கூறினார்.